சென்னை வணிக வளாகத்தில் விஜய்சேதுபதிக்கு மெழுகுச் சிலை திறப்பு

சென்னையில் பிரபல வணிகவளாகத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய்சேதுபதிக்கு இன்று மெழுச்சிலை திறக்கப்படவுள்ளது.

‘நடுவுல கொஞ்சம்பக்கத்த காணோம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சீதக்காதி’. இந்த படத்தில் மூத்த நாடகக்கலைஞர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் மேக்கப் மேன் ஒருவர், விஜய் சேதுபதியின் 80 வயது முதியவர் தோற்றத்திற்கு ஒப்பனை செய்துள்ளார்.

சீதக்காதி படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, தேசிய விருது வென்ற நடிகை அர்ச்சனா உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை என்று தெரிகிறது.

Wow…. #Makkalselvan #VijaySethupathi gets a wax statue at #ExpressAvenueMall #Chennai…. This is going to be rel… https://t.co/TxpyUoEbgs— VijaySethupathi FC (@MakkalSelvanFC) 1543683583000
தமிழில் விஜய்சேதுபதி நடிக்கும் 25வது படமாக தயாராகியுள்ள சீதக்காதி, வரும் 20ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர பணிக்காக சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் சீதக்காதி படத்தில் விஜய்சேதுபதி ஏற்றுள்ள அய்யா கதாபாத்திரன் மெழுகுச்சிலை நிறுவப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலை திறக்கப்படவுள்ள இந்த மெழுச்சிலை, எத்தனை நாட்கள் அதே வணிகவளாகத்தில் இருக்கும் என்ற விவரங்கள் தெரியவில்லை. எனினும், சீதக்காதி படத்துக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *