தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் முன்னாள் கவர்ச்சி நடிகை!

By Admin - January 14th, 2019

Tags : Kamal Haasan, Makkal needhi mayam, Shakeela, Category : Tamil News,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மிக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷகீலா, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட கவிர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானார். பிறகு அதுபோன்ற படங்களில் நடிப்பதை அவர் நிறுத்திவிட்டார்.

பிறகு தெலுங்கு சினிமாவில் வெளியான ‘ஜெயம்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அது அவருக்கு நல்ல வரவேற்பை வழங்கவே, தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் கட்சியில் இணைய பிரபல நடிகை விருப்பம்
இந்நிலையில் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படம் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் ஷகிலாவாக ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் மாதம் ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது கடந்த கால வாழ்க்கையை குறித்து சமீபத்தில் பேசிய அவர், ஷகீலா என்றாலே ஆபாச நடிகை என்று முத்திரை குத்திவிட்டனர். குடும்பத்துக்காகத்தான் அந்த படங்களில் நடித்தேன். ஆனால் என் குடும்பத்தில் இருந்த ஒருவரே நான் சம்பாதித்த பணத்தை ஏமாற்றிவிட்டார்.

ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்த நான், பலமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. அவர் தலைமை வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர விருப்பமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Posts

கமல்ஹாசனின் மய்யம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்!

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மய்யம் என்ற் கட்சியை தொடங்கினார். மதுரையில் மாநாட்டுடன், கட்சி பெயரையும்…

பிக் பாஸ் 2: முதல் கேப்டனாக ஜனனி ஐயர் தேர்வு!

சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில், வீட்டின் முதல் கேப்டனாக நடிகை ஜனனி ஐயர்…

கமல்ஹாசனை நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைத்த ரஜினிகாந்த் – tamil

மகளின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நடிகா் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனை நேரில் சந்தித்து…

பிக் பாஸ் தமிழ் 2: வெளியேறும் முதல் நபர் யார்?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. விஜய்…

Kamal Hassan’s Thevarmagan complete 23 years

#23YearsOfThevarmagan – An Epic Stands Very Much Alive in Audience Mind | #KamalHaasan – #SivajiGanesan…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?