முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

27 ஆண்டுகளுக்குப் பின், ரஜினியை 2வது இடத்திற்கு தள்ளிய அஜித்!

Tags : AJITH, PETTA, RAJINIKANTH, THALA, VISWASAM, Category : KOLLYWOOD NEWS,

ரஜினியின் பேட்ட படத்தை, அஜித்தின் விஸ்வாசம் படம் வசூல் ரீதியில் 2வது இடத்திற்கு தள்ளியுள்ளது. முன்னதாக தேவர் மகன் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால், பாண்டியன் படம் முதல் நாள் வசூலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தேவர் மகன், பாண்டியன் படங்கள் வெளியான போது, ரஜினியின் வசூல் 2வது இடம்

27 ஆண்டுகளுக்கு பின், விஸ்வாசம் படத்தால் ரஜினிக்கு 2வது இடம்

பொங்கல் திருநாளை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன. ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களுக்காக படைத்த விருந்து தான் ‘பேட்ட’ திரைப்படம்.

முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைல், அசத்தல் நடிப்பில் வெறித்தனமான கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் 2 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ.48 கோடி, தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.23 கோடியும் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வாசம்’ படம் கிராமத்துக் கதைக் களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏராளமான நட்சத்திர பட்டாளத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ‘பேட்ட’ படத்தை பின்னுக்கு தள்ளி ரூ.26 கோடி வசூலை விஸ்வாசம் ஈட்டியுள்ளது.

சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ.43 கோடியை வசூல் செய்துள்ளது. முன்னதாக அக்டோபர் 25, 1992ல் தேவர் மகன், பாண்டியன் படங்கள் ஒன்றாக வெளிவந்தன. அப்போது தேவர் மகன் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால், பாண்டியன் படம் முதல் நாள் வசூலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதற்கு வசூல் மன்னனாக ரஜினியே தொடர்ந்து நீடித்து வந்தார். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது விஸ்வாசம் படத்தின் முதல் நாள் வசூலால், ரஜினியின் ‘பேட்ட’ படம் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


Share :

Related Posts