முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

வசூல் ‘கிங்’ அஜித்.... 3 நாளில் ரூ.100 கோடி வசூல் : விஸ்வாசம் சாதனை! - tamil

Tags : AJITH, CHENNAI, SIVA, VISWASAM, Category : TAMIL NEWS,

சென்னை: அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸாகி 3 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் விஸ்வாசம். இப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ரிலீஸான முதல் நாளிலேயே தமிழகத்தில் ரஜினியின் பேட்ட படத்தை வசூலில் முந்தியது.

இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதும் தியேட்டர்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

viswasam இதனால் விஸ்வாசம் படம் ரிலீஸான 3 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
முதல் முறையாக சென்னை பாக்ஸ் ஆபீஸில் விஸ்வாசம் நேற்று ஒரே நாளில் ரூ. 1.04 கோடி வசூல் செய்துள்ளது.

அமெரிக்காவிலும் விஸ்வாசம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிங்கப்பூரில் ரூ. 1.48 கோடி வசூலித்துள்ளது.


Share :

Related Posts