முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விஸ்வாசம் படத்தை ரசிகரோடு ரசிகரா பாத்து ரசித்து போனி கபூர்!

Tags : AJITH, THALA, VISWASAM, VISWASAM REVIEW, Category : TAMIL NEWS,

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய், விவேக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், குடும்பக் கதையை மையப்படுத்திய இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 1 மணிக்கு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு, ரசிகர்களின் ஒன்றரை வருட காத்திருப்பு கிடைத்த வெற்றியாக இப்படம் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 59 ஆவது படத்தை தயாரிக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், விஸ்வாசம் படத்தை சென்னை சங்கம் திரையரங்கிறகு நேரில் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share :

Related Posts