தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கோடநாடு கொலை விவகாரத்தில் முதல்வா் தான் முதல் குற்றவாளி – ஆ.ராசா

By Admin - January 12th, 2019

Tags : A Raja, DMK, Edappadi Palaniswami, Jayalalithaa, Kodanad, Kodanad Documentary Video, Category : Tamil News,

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முதல்வா் பழனிசாமி பதவி விலகிவிட்டு விசாரணையை எதிா்கொள்ள வேண்டும் என்று ஆ.ராசா கருத்து தொிவித்துள்ளாா்.

2017ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதும், எஸ்டேட்டில் இருந்த பொருட்கள் கொள்ளயடிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தை ஆவணப்படமாக பதிவு செய்து வெளியிட்ட தெகல்கா பத்திாிகையின் முன்னாள் ஆசிாியா் மேத்யூஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பணமும், நகையும் இருந்தது புலனாய்வில் தொிய வந்துள்ளது என்று தொிவித்தாா்.

மேலும் ஆவணப்படத்தில் பல முக்கிய விவகாரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் தி.மு.க.வின் செய்தி தொடா்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா இன்று செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தெகல்கா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் பல முக்கிய விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் தற்போது முதல்வா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் சுற்றுசூழல் அமைச்சராக இருந்தபோது சிறப்பு அதிகாரம் பெற்று கோடநாடு பங்களாவிற்கு 24 மணி நேரமும் மின்சேவை வழங்கும் வகையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், கொலை, கொள்ளை நடைபெற்ற அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் அங்கு மின்சாரம் இல்லாமல் இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினாா். மேலும் அந்த பங்களாவில் 27 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில் அந்த கேமராக்கள் இயங்காமல் இருந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், முதல்வா் பழனிசாமி மீது குற்றம் சாட்டியுள்ள சயனை அப்ரூவராக மாற்றி நீதிபதி நேரில் விசாரிக்க வேண்டும். இந்த பிரச்சினை முடிவடையும் வரை முதல்வா் பழனிசாமி அந்த பதவியில் நீடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் தனது உள்துறை அமைச்சகம் இலாகாவையாவது வேறு நபரிடம் ஒப்படைத்து விட்டு விசாரணையை எதிா்கொள்ள வேண்டும்.

தெகல்கா நிறுவனம் மீது முதல்வா் பழனிசாமி அளித்த மனு மீதிருந்த இந்த விசாரணை தொடங்கப்பட வேண்டும். முறையாக விசாரணை நடைபெறும் பட்சத்தில் முதல்வா் பழனிசாமி தான் முதல் குற்றவாளி என்பது தி.மு.க.வின் கருத்து என்று தொிவித்துள்ளாா்.

Related Posts

மெரினா இடம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. அது முடிந்துவிட்டது.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க மறுத்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக…

பெரியாரை அவமதிக்கும் செயலை ஏற்க தமிழக மக்கள் தயாராக இல்லை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை

அ.தி.மு.க. எனும் வீரிய விருட்சத்திற்குள் பெரியாரும் இருக்கிறார் என்றும், பெரியாரை அவமதிக்கும் செயலை ஏற்க தமிழக மக்கள் தயாராக இல்லை…

கலைஞர் கருணாநிதி குடும்பம்

Karunanidhi family

எதிர்கட்சி பேரணியால் சென்னை ஸ்தம்பித்தது பதற்றமான சூழல்!

@mkstalin marches towards #MarinaBeach. KN Nehru and Farmer leader Ayyakkkannu detained in Trichy along with…

மெரினாவில் குவியும் காவல்துறையினர்!. அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனை என தமிழகமே எதிர்பார்ப்பு!.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மகன் 2014 ஆம் ஆண்டு காட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிாி இன்று தனது ஆதரவாளா்களுடன் கருணாநிதியின்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?