தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பேட்ட திரை விமர்சனம்

By Admin - January 10th, 2019

Tags : Petta, Petta review, Rajini, Rajinikanth, Vijay Sethupathi, Category : Kollywood News,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஒரு பெயர் போதும். 69 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். ஒரு சில வருடமாக க்ளாஸ் ரஜினியை பார்த்து வந்த நமக்கு கார்த்திக் சுப்புராஜ் பேட்ட மூலம் மாஸ் ரஜினியை மீட்டு கொண்டு வந்தாரா? பார்ப்போம். கதைக்களம்ரஜினிகாந்த் வாண்டடாக ஒரு கல்லூரிக்கு வருகிறார்.

அந்த கல்லூரியில் பாபி சிம்ஹா ஜுனியரை ராக் செய்து வருகிறார். டெரர் கேங் என்ற பெயரில் கல்லூரியில் அட்டகாசம் செய்கிறார். முதல் நாளே அவர்கள் கொட்டத்தை ரஜினி அடக்க, அதன் பின்பு ஹாஸ்டல் அவர் கண்ட் ரோலுக்கு வருகிறது. பிறகு அதே கல்லூரியில் படிக்கும் அன்வர், மேகா ஆகாஷை காதலிக்கிறார்.

அவர்கள் காதலுக்கு ரஜினி உதவி செய்ய, ஒரு பக்கம் பாபி ரஜினியை அடிக்க ஆள் செட் செய்கிறார். ஆனால், வந்து இறங்குவதோ வேற கேங். யார் அவர்கள், அவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்மந்தம், எதற்காக அன்வரை கொலை செய்ய இவர்கள் வருகிறார்கள் என்பதன் அதிரடியே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல்ரஜினிகாந்த் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ப்ராண்ட் தான் இந்த பேட்ட.

எத்தனை நாட்கள் ஆகிவிட்டது இப்படி ஒரு ரஜினிகாந்தை பார்த்து என்பது தான் ரசிகர்களின் கருத்தும். வார்டனாக மாணவர்களிடம் அன்பு, கண்டிப்பு, அதே நேரம் வில்லன் கும்பலிடம் அதிரடி என முதல் பாதியிலேயே பட்டையை கிளப்புகிறார். அதிலும் ரஜினியின் அதே துள்ளல் காமெடி, பாம்பு பாம்பு என்று முனிஷ்காந்தை கிண்டல் செய்வது, பாபியின் அப்பா வீட்டிலேயே சென்று அவரை கூலாக டீல் செய்வது என அதகளம் தான். அதிலும் நவாஸுதீன் கேங் அட்டாக் பண்ண ஆரம்பிச்சதும் ரஜினி எடுக்கும் அதிரடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், அதிலும் கிளைமேக்ஸில் ராமா ஆண்டாலும் பாட்டுக்கு நடனமாடுவது கார்த்திக் சுப்புராஜ் விண்டேஜ் ரஜினியை கொண்டு வந்துள்ளார்.

ஆனால், படத்தின் பிரச்சனை கதை தான், பல காலத்து பழிவாங்குதல் கதை என்றாலும் இத்தனை கதாபாத்திரங்களை எதற்கு வைத்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. எந்த ஒருவருக்கும் அழுத்தமான கதாபாத்திரமும் இல்லை. சிம்ரன், த்ரிஷா எல்லாம் செட் ப்ராப்பர்டி தான், விஜய் சேதுபதி தனக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார். படத்தின் வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம், அதுவும் ரஜினிக்கான அரசியல் களத்திற்கு ஏற்றது போல் உள்ளது. இத்தனை வருஷம் பொறுத்தாச்சு இனிமே நாம பாய வேண்டிய நேரம் என ரசிகர்களை மீண்டும் தெம்பூட்டுகின்றார். அனிருத் இசையில் பாடல்கள் கலக்கல் என்றாலும், டைட்டில் கார்டில் வந்த தேவா இசைக்கு இணையாக கூட பின்னணி இல்லை. பேட்ட பராக் பாடலை வைத்தே ஓட்டிவிட்டார்.

திரு ஒளிப்பதிவு சூப்பர். க்ளாப்ஸ்ரஜினி ரஜினி ரஜினி தான். படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட். முதல் பாதி விறுவிறுப்பு பல்ப்ஸ்பார்த்து பழகி போன கதை. அதோடு ரஜினி படம் என்றாலும் கொஞ்சமாது லாஜிக் வேண்டாமா கார்த்திக் சுப்புராஜ். இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம். மொத்தத்தில் இந்த பேட்ட ரஜினி ரசிகர்களுக்கான கோட்ட.

Related Posts

Superstar Rajinkanth’s 2.0 dupping process comleted!

Well in advance before the release, the team of 2.0 has got done with the…

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷைப் போன்று இசைக் கலைஞராகும் விஜய் சேதுபதி!

இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க இருக்கிறார்…

Top 20 Kollywood songs of the week July 22

Top 20 songs  ​1. Neruppu Da –  Film: Kabali 2. Senjitaley –   Film: Remo…

ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, வெற்றிடத்தை நிரப்ப முடியாது: நடிகை கவுதமி

நடிகை கவுதமி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு…

2Point0 Music Launch at Dubai started!

2.0 Pride of Indian Cinema has started its musical journey to become the Pride of…




அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?