தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பேட்ட, விஸ்வாசம் ஒரே நாளில் ரிலீஸ் வசூல் பாதிக்குமா?

By Admin - January 2nd, 2019

Tags : Petta, Petta collections, Viswasam, Viswasam pongal release, Category : Kollywood News,

ஒரே நாளில் மாஸ் ஹீரோக்களின் இரு படங்கள் திரைக்கு வருவதால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரைக்கு வரவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் மாஸாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்துடன் இணைந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால், விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சீதக்காதி, கனா, மாரி 2, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கேஜிஎஃப் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில், எந்தப் படமும் அதிகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-

இரு படங்களும் ஒரே நாள் இடைவெளியில் வந்தால் இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்கும். ஆனால், ஒரே நாளில் இரு படங்களும் வெளியாகிறது. இதனால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கும். மொத்தம் உள்ள 1,090 தியேட்டர்களில் சுமார் 600 தியேட்டர்கள் பேட்ட படத்துக்கும், மீதி விஸ்வாசம் படத்துக்கும் ஒதுக்கப்படலாம். முதல் மூன்று, நான்கு நாட்கள் ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள். அதன் பிறகு தான் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து பொதுமக்கள் பார்க்க வருவார்கள்.

ஒரு நேரத்தில் வசூல் கொடுக்கக் கூடிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாவதை தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் வரவேற்க மாட்டார்கள். ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Viswasam Another Flex from Kerala

Viswasam Another Flex from Kerala

‘சூப்பர் ஸ்டார்’ன்னா அது ரஜினி மட்டும் தான்… நடிகர் விஜயை சீண்டிய கலாநிதிமாறன்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன்…

Latest Pic Thala Ajith from the Shooting spot of Viswasam

Latest Pic #Thala #Ajith from the Shooting spot of #Viswasam.pic.twitter.com/sr647gP4bK

அமேசானிலும் சாதனை படைத்த விஸ்வாசம்!

சென்னை: விஸ்வாசம் படம் அமேசான் பிரைமிலும் சாதனை படைத்துள்ளது.சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த…

Lucky Fan gets a Snap with Thala in the Shoot of Viswasam in Hyderabad!

Lucky Fan gets a Snap with #Thala #Ajith bt the Shoot of #Viswasam in #Hyderabad!!…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?