தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஸ்வாசம் திரை விமர்சனம்

By Admin - January 10th, 2019

Tags : Ajith, Thala, Viswasam, Viswasam Review, Category : Kollywood News,

தல அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரத்தில் தல அஜித் என பல காரணங்களுக்காக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஸ்வாசம் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? வாருங்கள் பார்ப்போம்.

கதை:டாக்டராக இருக்கும் நயன்தாரா கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அஜித் எப்போதும் தன் கிராமத்து மக்களுக்காக வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு செல்பவர். நயன்தாரா செல்லும் வழியிலேயே தூக்குதுரை (அஜித்) சிலரை போட்டு அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து போலீசில் புகார் கொடுக்கிறார்.

ஆனால் பின்னர் அவரே வழக்கை வாபஸ் வாங்க நேரிடுகிறது. இப்படி மோதலில் ஆரம்பித்து பின்னர் அது காதலில் முடிகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. பின்னர் சில காரணங்களால் அஜித்தை விட்டு பிரிய முடிவெடுக்கிறார். குழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாராவை பார்க்க பலவருடங்கள் கழித்து செல்கிறார் அஜித். மீண்டும் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதை மிக எமோஷ்னலாக கூறியுள்ளது மீதி விஸ்வாசம்.

படத்தை பற்றிய அலசல்:விவேகம் படம் பார்த்து விமர்சித்தவர்களை வாயடைக்க வைக்கும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்துள்ளனர் அஜித் -சிவா கூட்டணி. அஜித் தன் நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். ஹீரோயினாக நயன்தாரா செம மெச்சுரான நடிப்பு. அவர் இடத்தில் வேறு ஒரு நடிகை இருந்திருந்தால் இவ்வளவு அழுத்தம் இருந்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான். அஜித் மகளாக நடிகை அனிகாவும் என்னை அறிந்தால் படத்தை விட ஒரு படி மேலே கவர்கிறார். காமெடிக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, விவேக் தங்கள் பங்களிப்பை சரியாகவே செய்துள்ளனர்.

பிளஸ்:வழக்கமான கதை தான் என்றாலும், விஸ்வாசம் படத்தின் பெரிய பிளஸ் எமோஷன் தான். உங்கள் கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளது. அஜித், நயன்தாரா நடிப்பு.

மைனஸ்:இந்த பாடல் எதற்க்காக வைத்தார்கள் என கேட்கும் அளவுக்கு தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட சில பாடல்கள். இருப்பினும் அடிச்சி தூக்கு பாடலுக்கு மட்டும் மொத்த தியேட்டரும் எழுந்து ஆடியதை மறுக்கமுடியாது. முதல் பாதியில் வரும் சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் ட்ராமா போல இருந்ததும் ஒரு மைனஸ். மொத்தத்தில் விஸ்வாசம் படத்தால் சிவா இஸ் பேக். தல ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்.

Related Posts

Latest Pic Thala Ajith from the Shooting spot of Viswasam

Latest Pic #Thala #Ajith from the Shooting spot of #Viswasam.pic.twitter.com/sr647gP4bK

காவேரி போராட்டத்தில் கலந்துகொள்ள வருவாரா அஜித்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்துவரும் நிலையில் காவிரி மேலாண்மை…

Ajith’s Vedalam remake in Telugu, Pawan Kalyan as hero!

Composer Thaman has been roped in to compose music for the Telugu version of Ajith…

விஸ்வாசம் 2வது சிங்கிள் டிராக் ‘வேட்டிக்கட்டு..’!

இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

Thala Ajith Rare Picture: Ajith with Mottai Rajendiran Old photos

How Many Of You Seeing This Picture for the Very First Time? THALA AJITH- The…




அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?