தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

6 மாதத்திற்கு ஒரு முறை ஸ்டாலின் லண்டன் செல்வது ஏன் காணிக்கை செலுத்தவா? டிடிவி தினகரன்

By Admin - January 6th, 2019

Tags : By-election, Kumbakonam, Tiruvarur, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : TTV Dhinakaran,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் உருவாக்கிய சாதனையை நாங்களே திருவாரூரில் முறியடிப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சேத்தியாத்தோப்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக கும்பகோணம் சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று சேத்தியாதோப்பு சென்றுபோது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “அப்பா தொகுதியில் தேர்தல் நடக்கும்போது மகனான ஸ்டாலினுக்கு போட்டியிட ஏன் பயமாக இருக்கிறது? தேர்தல் நடைபெற்றால் நாங்கள்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.” என்றார்.

“திருவாரூர் தொகுதி ஏற்கெனவே திமுக வெற்றி பெற்ற தொகுதி. இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெற ஸ்டாலினுக்குத் தெம்பு இல்லையா? என்று தெரியவில்லை. அவருக்குத் தைரியம் இல்லை.” என்று சாடினார்.

மேலும், “சித்தியை பார்க்க போனால் நேர்த்திக்கடன் என்று சொல்கிறார். ஆனால் இவர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். இது எந்த நேர்த்திகடன் ஆகும்? ஒரு காலத்தில் எனக்கு பதில் சொல்ல முடியாது என குறைந்து மதிப்பீடு செய்தார். இப்போது ஏன் பதில் சொல்கிறார் என்று தெரியவில்லை.” என்றும் தெரிவித்தார்.

“ஆர்.கே. நகரில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அதேபோல திருவாரூர் தொகுதியில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். தேர்தல் நடந்தே ஆகவேண்டும். என் மீது தற்போது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் திமுகவிற்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. அகில இந்திய அளவில் தன்னை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகரில் போட்டியிட்ட என்னை மக்கள் பத்தாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். திமுக டெபாசிட் இழந்தது. அதனால்தான் டெபாசிட்டை இழந்த ஸ்டாலின் என்று சொல்கிறார்கள்.” என்று கடுமையாக விமர்சித்தார்.

“எங்களுக்கு போட்டி என்பது கிடையாது. எங்க ரெக்கார்டை நாங்க தான் பிரேக் பண்ணனும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றியைவிட கருணாநிதி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காமராஜர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். புதிய சாதனை படைப்போம். திருவாரூர் கோட்டையைப் பிடிப்போம்.” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

Related Posts

டிடிவி தினகரன் கைது

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று (3-ந்தேதி) திருச்சி விமான…

ஜெயலலிதாவுக்கு பின் சட்டப்பேரவையில் தனி ஒருவனாக டிடிவி

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையின் போது தனி ஒருவராக, எதிர்கட்சிகளின் வரிசையில் சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அமர்ந்திருந்தது பலரையும்…

ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு

சென்னை அசோக்நகரில் உள்ள நடேசன் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) தலைமை அலுவலகம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது….

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டுமான தொழிலாளி கைது!

திருவாரூர் மாவட்டத்தின் விலவாடி மூளையின் கே கேரைச் சேர்ந்தவர் தென்கோவன். இவர் அப்பகுதியில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்….

அமமுக மக்கள் மனதில் இடம்பிடிக்குமா?

மதுரை: திராவிடத்தை தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் டிடிவி தினகரன். ஆட்சியை பிடிப்போம் என்றும் கூறியுள்ளார்….
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?