முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!!

Tags : AJITH, AMITABH BACHCHAN, TAMIL REMAKE PINK, VIDYA BALAN, Category : KOLLYWOOD NEWS,

அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து நடிகர் அஜித், எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். கடந்த 2016ல் தேசிய விருதுக்கு தேர்வான படம்தான் பிங்க். இந்தியில் அனிருத்தா ராய் சவுத்திரி இயக்கி இருந்தார்.

அஜித்தின் இந்த 59வது படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஆர்ட் டைரக்டராக கதிர் பணியாற்ற உள்ளார். இந்தியில் அமிதாப் பச்சன் கேரக்டரில் நடிகர் அஜித் நடிக்கிறார். நடிகை டாப்ஸி கேரக்டரில் நடிகை நஸ்ரியா நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கி, 2020, ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.


Share :

Related Posts