முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

மலையாள திரையுலகில் கால்பதிக்கும் விஜய் சேதுபதி!

Tags : MARCONI MATHAI, MOLLYWOOD, VIJAY SETHUPATHI, Category : KOLLYWOOD NEWS,

தெலுங்கில் சிரஞ்சீவியோடு நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்ததாக மலையாள திரையுலகில் கால்பதிக்கவுள்ளார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினி கூறியது போல மஹா நடிகனாக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி, தமிழில் ஆண்டுக்கு குறைந்தது 5 முதல் 6 படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘சைரா நரசிம்ஹ ரெட்டி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து விஜய் சேதுபதி மலையாளத்தில் கால்பதிக்கவுள்ளார். ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்கும் மார்கோனி மத்தாய் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடித்துள்ள ’பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர் மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் விஜய்சேதுபதி அகில இந்தியாவுக்கான நடிகர் என அவரது ரசிகர்கள் அவருக்கு புகழ்மாலை சூட்டி வருகின்றனர்.


Share :

Related Posts