முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விஸ்வாச தரிசனம் மிகச்சிறப்பு : ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு

Tags : VISWASAM, VISWASAM REVIEW, Category : TAMIL NEWS,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம். தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இயக்குநர் சிவா – அஜித் கூட்டணியில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம் பிரமாண்டமாக ஓடிக்கொண்டுள்ளது. அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் ஆகியவை கலந்துள்ளது என படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் விஸ்வாசம் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.இந்த படத்தின் மூலம் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், சுமைகளை அவர்கள் மேல் சுமத்தாமல் எப்படி காக்க வேண்டும் என இயக்குனர் தெளிவாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 

மேலும், ரசிகர்களை கண்கலங்க வைக்கும் அளவிற்கு அஜித் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும், இரண்டாம் பாதி பார்ப்போர் மனதை உருக்கும் வகையிலும், இதுவரை கண்ணீர் வராதவர்களுக்கு கூட கண்ணீர் வருவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளில் அஜித் வழக்கம் போல மிரளவைத்துள்ளாராம். படம் முடியும் வரை ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் கைதட்டி படம்பார்த்து ரசித்துள்ளனர்.  “தல உங்களுக்காக ஒருவருடம் தவம் இருந்து காத்திருந்ததற்கு உங்களின் விஸ்வாச தரிசனம் மிகச்சிறப்பு” என புகழ்ந்து வருகின்றனர். 


Share :

Related Posts