தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சுயலாபத்திற்காக ’விஸ்வாசம்’ கதையை வெளியிடுவதா..?? அஜித் ரசிகர்கள் கொதிப்பு..!!

By Admin - January 8th, 2019

Tags : Ajith, Viswasam, Viswasam Movie, Viswasam Review, Viswasam story, Category : Tamil News,

’விஸ்வாசம்’ படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் இணையதளங்கள் பல, ’விஸ்வாசம்’ படக்கதை இதுதான் என வெளியிடும் தகவல்களில் எதுவும் உண்மையில்லை என அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

’விவேகம்’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

வழக்கம் போல அஜித்தன் படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு ‘விஸ்வாசத்திற்கும் உருவாகியுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் வலைதளங்கள் சில தங்களது தளத்திற்கு வாசகர்கள் வருகை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ’விஸ்வாசம்’ படம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை இவை வெளியிட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக ‘விஸ்வாசம்’ படத்தின் கதை இதுதான் என்பது போல சில செய்திகள் பல்வேறு இணையதளங்களில் ஆக்கிரமித்துள்ளன. இதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த செய்திகளால் அதிருப்தியில் உள்ள அஜித் ரசிகர்கள், ‘விஸ்வாசம்’ கதை இதுதான் என்று கூறும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்று தெரிவித்து வருகின்றனர். மேலும். விஸ்வாசம் கதை தொடர்பாக சில இணையதளங்கள் வெளியிடும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இணையதளச் சந்தையில் விஸ்வாசம் குறித்து வெளிவரும் எந்த செய்தியும் வாசகர்கள் மற்றும் வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் முதன்மை பெறுகிறது. இதன்மூலம் வருவாயை அதிகரிக்கவே வலைதளங்கள் பல இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால் விஸ்வாசம் படத்தில் வசூல் பாதிக்கக்கூடும் என அஜித் ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே திரைத்துறைக்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ அச்சுறுத்தலாகவுள்ள நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இயங்கும் சில இணையதளங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளும் சினிமா துறைக்கு பிரச்னையாகி வருகின்றன. இதனால் இணையதளங்கள் பயன்பாட்டில் கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் என திரையுலகினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Posts

Erode AJITH Fans Offered Free Note Books to School Childrens

Today Erode AJITH Fans Offered Free NoteBooks,Stationery Materials to School Childrens for #AJITH’s 47th Birthday…..

“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்!

“எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” – விஸ்வாசம் பாடல்! சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்…

எதுவும் நிகரில்லை அஜித் ரசிகர்களின் விசுவாசத்திற்கு முன்னால்

எதுவும் நிகரில்லை #அஜித் ரசிகர்களின் #விசுவாசத்திற்கு முன்னால் Temple City Ajith Fans -Madurai !!

தமிழில் அதிகம் வசூல் செய்த படங்கள்! All Time Kollywood box office collection

Kollywood box office, Here is the list of top 10 films with the highest share…

விஸ்வாசம் தியேட்டர்களில் அலை மோதும் பெண்கள், பெண்குழந்தைகள் கூட்டம்!

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கூட்டம் விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டரில் பார்க்க முடிகிறது. அதுவும்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?