தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஸ்டாலின் சுயநலப் புலி! அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..? டி.டி.வி. தினகரன் கேள்வி

By Admin - January 8th, 2019

Tags : AMMK, DMK, M.K.Stalin, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : Tamil News,

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பொதுமக்களை காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்பாதே என்று பெரியார் கூறினார்.அவனது இன்றைய நிலையை பார்.  அவன் தியாகியா அல்லது தகுதியை தாண்டிய செல்வந்தனா என்பது புரியும் என்று கூறினார்.  55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க. ஸ்டாலினை பற்றிதான் போலும் என கூறியுள்ளார்.

கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார்,அவன் தியாகியா அல்லது தகுதியைத்தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார்.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி!

லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும்.

லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது.
பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி. என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..?

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அ.ம.மு.க.வை பார்த்து பயந்து பதுங்குவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  அவர் தொடர்ந்து, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி.  தேர்தலுக்கான கூட்டணிக்கு பா.ஜ.க. என வேஷமிடுபவர் ஸ்டாலின் என்றும் கூறியுள்ளார்.

Related Posts

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேரமாட்டார்- தங்க தமிழ்ச்செல்வன்

சென்னை,கரூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார்.இந்த நிலையில் கடந்த…

இன்னும் தேர்தல் தேதி அறிவிப்பு வரல, அமமுக பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டது!

இன்னும் தேர்தல் தேதி அறிவிப்பு வர்ல அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டார்கள். #திருவாரூர்…

செந்தில்பாலாஜி கோவை கூட்டத்தில் சவால்!

செந்தில்பாலாஜி கோவை கூட்டத்தில் சவால் விட்டுள்ளார் OPS – EPS க்கு சவால் விடும் வகையில் MLA தகுதி நீக்கம்…

TTVDhinakaran சமூக வலைதள ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் தஞ்சை

TTVDhinakaran Deputy_General_Secretary BE, MLA AIADMK AMMA Chinnamma மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள…

மீண்டும் அணிமாறும் படலம் ஆரம்பம்!

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்….
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

தருமபுரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?