தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: அமிதாப் பச்சன்!

By Admin - February 17th, 2019

Tags : Amitabh bachchan, Crpf, Edappadi K Palaniswami, Jammu Kashmir, Pulwama terror attack, Pulwama terrorist attack, TN CRPF Jawans, Category : Tamil News,

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியன், கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த வசந்தகுமார், கர்நாடகாமாநிலம், மாண்டியாவை சேர்ந்த குரு ஆகியோரும் அடங்குவர்.

வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் நேற்று அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அந்த நிதியை வீரர்களின் குடும்பங்களுக்கு எப்படி பிரித்து கொடுப்பது என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

புல்வாமா தாக்குதலை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் கருத்து பதிவிட்ட மாணவிகள்!

புல்வாமா தாக்குதலை புகழ்ந்து, தேசத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதாக காஷ்மீர் மாணவிகள் 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது…

அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!!

அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்,…

ஜெயலலிதா சிலைக்கு 4 முலம் வேட்டி: ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது கொந்தளிப்பில் அதிமுகவினர்

சென்னை : முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறப்பட்ட உள்ளது மறைந்த…

தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் தொடரும் துப்பாக்கிச்சண்டை: 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?