தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா!

By Admin - February 15th, 2019

Tags : Arya, Arya Sayyesha, Arya sayyeshaa marriage, Sayyesha, Sayyesha arya marriage, Shhaheen ahmeed, Category : Tamil News,

ஆர்யா எங்க வீட்டு மருமகனாக வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சாயிஷாவின் தாய் ஷகீன் அஹ்மீத் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை.

இந்த நிலையில், தான் தனியார் தொலைக்காட்சியில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் தற்போது ஆர்யாவின் திருமணம் உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஆர்யாவின் நண்பரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்கத்தின் பொருளாளருமான விஷால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Such a beautiful moment in our lives. We are overjoyed to welcome @arya_offl into our family as our son-in-law to b… https://t.co/HzECWlImcz— Shaheen (@ShhaheenAhmeed) 1550124784000
இந்த நிலையில், கஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடன் ஜோடி சேர்ந்த சாயிஷாவை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் மூலம் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Happy Valentines Day! ❤️ https://t.co/5sQfQJARGf— Sayyeshaa (@sayyeshaa) 1550123304000
இந்த நிலையில், காதலர் தினமான இன்று நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்து முறையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் மார்ச் மாதத்தில் சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று தான் சாயிஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், திருமணம் தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy Valentines Day �� #Blessed �� @sayyeshaa https://t.co/WjRgOGssZr— Arya (@arya_offl) 1550123476000
இதற்கிடையில், சாயிஷாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவரது அம்மா ஷகீன் அஹ்மீத் கூறுகையில், ஆர்யா எங்க வீட்டிற்கு மருமகனாக வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வரும் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து ஆர்யா – சாயிஷா திருமணம் நடக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் இந்தத் திருமணம் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்து கூறும் என்பதால், பிரமாண்டமான திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Lucka Maattikkichi Song Official Teaser

Song teaser of Lucka Maattikkichi from Vasuvum Saravananum Onna Padichavanga ( VSOP ). D. Imman’s…

கல்யாண ஆசையில் ஏமாந்த மூன்று பெண்கள்.. மேடையிலேயே கதறி அழுத ஆர்யா.. நடந்தது என்ன?

சமூக வலைத்தளம் மூலம் தான் திருமணம் செய்ய போவதாக அறிவித்த ஆர்யா, கடந்த பிப்ரவரியில் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய `கலர்ஸ்…

‘Inji Iduppazhagi’ movie new poster

‘Inji Iduppazhagi’ movie new poster Inji Iduppazhagi starring Arya and Anuskha are the main lead…

Arya Ghajinikanth movie new pictures

Ghajinikanth movie new pictures

Samantha replaced Nayanthara place in ‘Bangalore days’

Samantha replaced Nayanthara place in ‘Bangalore days’ Actress Samantha Ruth Prabhu is take Nayanthara place…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?