தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் எடப்பாடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி: தினகரன்

By Admin - February 18th, 2019

Tags : AMMK, EPS, TTV, TTV Dhinakaran, Category : Tamil News,

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது.

தவறவிடாதீர்

ஸ்டெர்லைட் தீர்ப்பு: தற்காலிகமாக நிம்மதி மூச்சு விட கொடுத்த விலை 14 உயிர்கள்; கனிமொழி ட்வீட்
தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவிகள் 13 பேரை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக் கொன்றார்கள். மத்திய அரசின் கைப்பாவையாக மாறி, ஈவு இரக்கமற்ற இந்த கொலை பாதகத்தைச் செய்த தமிழக அரசு அதனை மறைக்க, ஆலையை மூடுவதாக நாடகமாடியது. ‘நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீ அழுவதைப் போல அழு’ என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்துடன் மறைமுக கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியாளர்கள் செயல்பட்டனர்.

ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, தூத்துக்குடியில் போராடிய மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாக அமைந்திருக்கிறது. மேலும், ‘ஆலையைத் திறக்கலாம் என்று உத்தரவிட தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை’ எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் ஆலையை மீண்டும் திறப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதனை நடத்தும் வேதாந்தா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதற்கு முன்பாகவே தமிழக அமைச்சரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரசின் கொள்கை முடிவாக எடுத்து அதனை நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். மக்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் ஆட்சியாளர்கள் இதைத்தான் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் எந்தத் தார்மீக நெறிகளும் இல்லாமல் 13 பேரை தலையிலும், நெஞ்சிலும் குறி வைத்துச் சுடுவதற்கு உத்தரவிட்ட பாவத்திற்குக் கொஞ்சமாவது பிராயச்சித்தம் தேடிக்கொள்ளலாம்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அமமுக நேரடியாக களத்திற்குச் சென்று அவர்களோடு கரம் கோர்த்து நின்றதைப் போல, அந்த ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தூத்துக்குடி மக்களோடு நின்று, அவர்களின் உணர்வுகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Posts

இன்று தீர்ப்பு வெளியாகிறது.. அடுத்த வாரத்தில் ஆட்சி கவிழ்கிறது – ஜோதிடர்

அ.தி.மு.க.வில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன்…

சசிகலா கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்!

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலாவின் கணவர் ம…

அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி சதி: தினகரன் குற்றச்சாட்டு

அதிமுகவை அழிக்க பிரதமர் மோடி சதி செய்வதாக ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.தேனியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்திற்கு என்ன அர்த்தம் என்பது கூட இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தெரியாது : டி.டி.வி. தினகரன்

கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துடன் உள்ள அதிமுக கொடியை பயன்படுத்த டி.டி.வி. தினகரனுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி…

அதிமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல்

தமிழகங்களில் பல்வேறு இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு பரசீலனையின்போது அதிமுக, திமுக, அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?