தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட 'ஜப்பான் துணை முதல்வர் ஸ்டாலின்'!

By Admin - February 18th, 2019

Tags : Japan deputy chief minister stalin, MK stalin, Twitter, Category : Tamil News,

ஜப்பான் நாட்டின் துணை முதல்வராக இருந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உளறியதை வைத்து நெட்டிசன்கள் #ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளனர்.

சென்னையின் வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமா் மோடி பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதிலிருந்து தொடா்ந்து 4 நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

மெட்ரோ ரயிலில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயணிக்கிறார்கள் எனத் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிறு இரவு முதல் சமூக வலைத்தளங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் சேவை பற்றி பேசிய வீடியோ வைரலானது.

அதில் அவர், “போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான டெண்டர் தொடர்பாக நான் ஜப்பான் நாட்டிற்குத் துணை முதல்வராக இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.” என்று பேசியுள்ளார்.

ஜப்பான் நாட்டிற்கு துணை முதல்வராக இருந்தபோது என ஸ்டாலின் உளறிவைத்திருப்பதை கவனித்த நெட்டிசன்கள், ட்விட்டரில் #ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி கிண்டல் செய்து வருகிறார்கள்.

எப்பல்லாம் நாம சோகமா இருக்கமோ..? அப்பல்லாம் நம்மள சந்தோசப்படுத்த ஒரு கோமாளிய கடவுள் அனுப்புவாரு.. அப்படி கடவுளால்… https://t.co/PpFLiKH1IH— பனையோலை (@panaiyolai101) 1550427569000 அவர்களில் ஒருவர், “எப்பல்லாம் நாம சோகமா இருக்கமோ..? அப்பல்லாம் நம்மள சந்தோசப்படுத்த ஒரு கோமாளிய கடவுள் அனுப்புவாரு.. அப்படி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு நமக்காக அனுப்பப்பட்டவர் தான் ஸ்டாலின் என்றால் அது மிகையாகாது..” என பதிவிட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டுக்கு கேபிட்டல் என்ன அங்கிள் ? ஜப்பான் நாடு இல்லை தம்பி, அது ஒரு மாநிலம், உக்காரு… https://t.co/KpD3BNyoFz— Tamil_tweeter (@Tamil_Tweeter) 1550419916000 திமுக கிராம சபை கூட்டத்தில் ஒரு சிறுவன் ஸ்டாலினிடம், “ஜப்பான் நாட்டுக்கு கேபிட்டல் என்ன அங்கிள்?” எனக் கேட்பதாகவும் அதற்கு ஸ்டாலின், “ஜப்பான் நாடு இல்லை தம்பி, அது ஒரு மாநிலம், உக்காரு” என பதில் சொல்வதாகவும் நக்கல் பண்ணியிருக்கிறார்.

Related Posts

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலினின் வீட்டிற்கு நள்ளிரவு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது….

எம்ஜிஆா் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயா்!

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி அழைப்பிதழில் ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் பெயா் இடம் பெற்றுள்ள நிலையில்…

எம்ஜிஆர் விழாவில் கலந்துகொள்ள முடியாதது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க முடியாததற்கான காரணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறறார். எம்ஜிஆர்…

Go back Sonia: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்

கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆன நிலையில், இன்று கோ…

“ராகுல் காந்தியே வருக…நாட்டிற்கு நல்லாட்சி தருக” : மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை,சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:நான் இன்று…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?