தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

3 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப் படாத அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உட்பட 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், அதில் 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால் இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்தே, இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி ஆகியோர் மூலம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஏப்ரல் 18ஆம் தேதி லோக்சபா தேர்தல், தமிழகத்தில், ஒரே கட்டமாக நடக்கிறது. அப்போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கிறது. அப்போதே, மேற்சொன்ன மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும், நடத்த வேண்டும் என்பது திமுக கோரிக்கை. இந்த நிலையில் இன்று திமுக சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், அரசியல் காரணங்களுக்காக 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் இந்த மூன்று பகுதிகளுக்கும் மற்ற தொகுதிகளோடு, இடைத்தேர்தல் நடத்தியிருக்கலாம். எனவே இந்த மூன்று பகுதிகளுக்கும் உடனடியாக இடைத் தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்றார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான, வழக்கறிஞரிடம் ஏன் இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு இந்த மூன்று சட்டசபை தொகுதிகள் தொடர்பாக, வழக்கு நிலுவையில் இருப்பதால், நாங்கள் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம், இது குறித்து பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர். அதேநேரம், உடனடியாக தேர்தல் தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்டு அறிந்த பிறகுதான் உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று தெரிவித்து விட்டனர்.
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?