தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

By Admin - March 26th, 2019

Tags : Cooker, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : Tamil News,

இந்த நிலையில் அமமுகவுக்கு பொதுவான சின்னம் ஒதுக்குப்படுமா..? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை தொடங்கி நடைபெற்றது. அப்போது, அமமுகவுக்கு முதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் அதிகாரி குக்கர் சின்னத்தை அளித்தார் என டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்தார். இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியது போன்று உச்சநீதிமன்றமும் இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது பிரதிநிதித்துவ சட்டப்படி முரணானது; பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, இன்றைக்கே அமமுகவை கட்சியாக பதிவு செய்கிறோம்; குக்கர் இல்லை என்றால் வேறு ஒரு பொதுச்சின்னம் தரவேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றமும் மறுப்பு தெரிவித்துவிட்டது.

அதேசமயம், ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம் என தெரிவித்த நீதிபதிகள், ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல்வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என தெரிவித்தனர். அப்போது, குக்கரை போன்று பொதுவான சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சையாக கருதி ஒரே பொதுச்சின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் களம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி பொதுச் சின்னத்தை ஒதுக்க நீதிபதிகள் உத்தரவிட்டதாக கூறினார்.

Related Posts

தினகரனுக்கென்று பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் : எடப்பாடி

  தினகரனுக்கு தூது அனுப்பிய சீனியர் அமைச்சர்..! இதோ இன்னும் ஐந்தே நாட்களில் முடியப்போகிறது 2018, புது வருடம் பிறந்த…

டிடிவி தினகரனின் புதிய கட்சிக்கு அங்கீகாரம் வழங்க தேர்தல் ஆணையம் முடிவு

டிடிவி தினகரனின் புதிய கட்சிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம்…

அமமுகவிற்கு எந்த சின்னம் ஒதுக்கலாம்! தீவிர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்

அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு தற்போதைக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என தேர்தல் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி…

பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியது சசிகலாதான்: தினகரன்

பெங்களூரில் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பன்னீர்செல்வம் சொல்வதை எல்லாம் எடுத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய…

மக்கள் தலைவன் டி. டி. வி. தினகரன் – சிறப்பு பார்வை

டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்…




அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share