தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார் : டிடிவி தினகரன்

By Admin - March 15th, 2019

Tags : TTV, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : TTV Dhinakaran,

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமமுக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் அமமுக கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, இளவரசியின் மகன் விவேக், நடராஜனின் சகோதரர் ராமசந்திரன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

சசிகலாவை சந்தித்த பிறகுடிடிவி தினகரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல்மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை எங்களது கட்சி சார்பில் எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசனை நடத்தினேன். தொகுதிவாரியாக யாரை வேட்பாளராக தேர்வு செய்வது, தேர்தல்அறிக்கையை தயாரிப்பது குறித்துபேசினோம்.

அமமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா சில வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த தேர்தல் எங்களுக்கு முக்கியமானது என்பதால் வேட்பாளர்களை கவனமாகபரிசீலித்து தேர்வு செய்தார். அந்தப் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிட்ட போது இஸ்லாமிய கட்சிகள் ஆதரவு அளித்தன. எனவே அவர்களுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதால், ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளோம். பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மாவட்ட காவல் அதிகாரி முடிவை அறிவித்துள்ளார்.

இதேபோல, பொள்ளாச்சி ஜெயராமனின் பேச்சும் சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் அவரது மகன் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் பலியாகி இருக்கிறார். அந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

Related Posts

பிரபல பின்னணி பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்

பிரபல பின்னணி பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். ‘சொல்லத் துடிக்குது மனசு’ படத்தில், ‘தேன்மொழி இன்ப…

இன்று தீர்ப்பு வெளியாகிறது.. அடுத்த வாரத்தில் ஆட்சி கவிழ்கிறது – ஜோதிடர்

அ.தி.மு.க.வில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினகரன்…

40 தொகுதிகளிலும் அமமுக மகத்தான வெற்றிபெறும் : டிடிவி தினகரன்

  40 தொகுதிகளிலும் அமமுக மகத்தான வெற்றிபெறும் : டிடிவி தினகரன்      

அதிமுக vs அமமுக டி20 மோதல் : சூடுபிடிக்கும் களம்

அவை : திருவள்ளூர் (தனி)  தென் சென்னை  காஞ்சிபுரம் (தனி)  சேலம்  நாமக்கல்  ஈரோடு  திருப்பூர்  நீலகிரி (தனி)  பொள்ளாச்சி …

நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு

சென்னை: இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதாவை நாம் சும்மாவா சொன்னோம்.. ஒரு வார்த்தை பேசினாலும் அதில் உடும்பு பிடியாக இருந்து…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?