தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

By Admin - March 11th, 2019

Tags : Aiadmk, Dmdk, Category : Political News,

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக முன்வந்தது. இதை தேமுதிக ஏற்கவில்லை. பாமகவுக்கு இணையாக தொகுதிகள் வேண்டும், அதோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இதை அதிமுக அடியோடு நிராகரித்தது. இருப்பினும் பாஜ தலைவர்களின் நெருக்கடியால், தேமுதிகவை தன் பக்கம் இழுக்க தொடர் பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டது. 6ம் தேதி பிரதமர் மோடி வரும்போது விஜயகாந்த்தை எப்படியும் மேடை ஏற்றி விட வேண்டும் என்ற நோக்கில், 5ம் தேதி விஜயகாந்த் வீட்டுக்கே சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே, திமுகவுடனும் கூட்டணி தொடர்பாக தேமுதிகவினர் பேசினர். இது அதிமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கூட்டணி குறித்து நேற்று மாலைக்குள் தேமுதிக முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் தேமுதிக தனியாகவோ அல்லது வேறு கட்சியுடன் கூட்டணிக்கோ செல்வதில் எங்களுக்கு எந்தஆட்சேபனையும் இல்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய, இன்னும் 9 நாட்களே உள்ளது. எனவே இன்று மீண்டும் அதிமுக, தேமுதிக இடையே சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக-விற்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Posts

டிடிவியுடன் மோதுவது எளிதான காரியமில்லை!

சுயேட்சை வேட்பாளராக கருதப்படும் டிடிவியுடன் மோத திமுகவுக்கு 11 கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறது… ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 32 அமைச்சர்கள்…

நான்கு கட்சிகளுடன் கூட்டணி : டிடிவி.தினகரன் பேட்டி

நான்கு கட்சிகளுடன் கூட்டணி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை விரைவில் முற்றுபெறும் தி ஹிந்து நாளிதழுக்கு டிடிவி.தினகரன் பேட்டி கேள்வி 1:…

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானதையடுத்து சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே 21 தொகுதிகள் காலியாகவுள்ளதாக…

The money seizure of a vehicle test in Salem

The car was hit by a car in which Shanmugam was on his way to…

எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை – இளம்பெண் போலீசில் வாக்குமூலம்

கோபி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன். இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?