தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்காக புதிய அரசாணையைவெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில் பள்ளி,கல்லூரி மாணவிகள் மற்றும்இளம் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.நேற்று முன்தினம் இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட விபரங்களை வெளியிட்டதற்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் தொடர்ந்த வழக்கில்,பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்காக புதிய அரசாணையைவெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. newstm.in
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?