தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!

By Admin - March 23rd, 2019

Tags : AMMK, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : TTV Dhinakaran,

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அமமுகவின் தேர்தல் அறிக்கையை அமமுக வின் துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

1. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு

தமிழகத்தில் அனுமதி இல்லை.

2. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக

அறிவிக்கப்படும்.

3. நிஷிஜி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

4. அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி.

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும்

தள்ளுபடி.

5. தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம்

அமைக்கப்படும்.

6. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள்

வழங்கப்படும்.

7. நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார

விலை நிர்ணயிக்கப்படும்.

8. ஒவ்வொரு கிராமத்திலும் நீர் நிலைகள் மேன்படுத்தப்படும்.

9. விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.

10. பேரிடர் மறுவாழ்வு ஆணையம் நிரந்தரமாக அமைக்கப்படும்.

11. தமிழகத்திற்கு என தனி செயற்கைகோள் ஏவப்படும்.

12. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை

13. மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும்.

14. மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

15. கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச கீவீதிவீ வசதி,

கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (ஜிகிஙி).

16. ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டு ரூ.10,000 கல்வி உதவி

தொகை.

17. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.

18. ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து.

19. பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்.

20. ஆறு இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்.

21. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் மானியம்.

22. கேபிள் டிவி கட்டணக் குறைப்பு.

23. கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 2

லட்சம் வரை வணிகக் கடன்.

24. முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ.1000லிருந்து ரூ.2000மாக

உயர்வு.

25. வயது முதிர்ந்த ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள்,

நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்புச் சாரா

தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை.

26. மத்திய, மாநில அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு

முன்னுரிமை.

27. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி.

28. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளுக்கும்

தீர்வு.

29. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டு வசதி.

30. தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2

லட்சம் வட்டியில்லா கடன்.

31. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட

ஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

32. கச்சத்தீவை திரும்பப்பெற சட்ட நடவடிக்கை.

33. மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை.

34. மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்.

35. ஏழை பெண்கள் திருமணத்திற்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப்

பொருட்கள் இலவசம்.

36. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

37. சில்லறை மீன் விற்பனையில் ஈடுபடும் மீனவர்களுக்கு எடைக்கருவி,

ஐஸ்பெட்டி, அலுமினியக் கூடை மற்றும் குடை இலவசமாக

வழங்கப்படும்.

38. இளைஞர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும்.

39. ஊராட்சி ஒன்றியம்தோறும் அம்மா கிராமப்புற வங்கி

ஏற்படுத்தப்படும்.

40. அம்மா மோட்டல் மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்கள்

பொறுப்பில் அமைக்கப்படும்.

41. காவலர்களுக்கு உரிய மனநல ஆலோசனை.

42. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்

கடுமையான தண்டணை வழங்க உரிய சட்ட திருத்தம்.

43. இஸ்லாமியர்களின் முன்னேற்றம் தொடர்பான நீதியரசர் சச்சார்

மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைக்கு சட்ட

அங்கீகாரம்.

44. ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வக்ஃபு வாரியம்

மூலம் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

45. கிறிஸ்தவராக மதம் மாறும் தலித் சமூகத்தினரின் சலுகைகள் மற்றும்

உரிமைகள் தொடர சட்ட நடவடிக்கை.

46. ஏழு பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை

வலியுறுத்தப்படும்.

47. தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க நடவடிக்கை.

48. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, குலசேகரப்பட்டிணத்தில்

ராக்கெட் ஏவுதளம், மல்லிப்பட்டிணத்தில் கடல்வாழ் உயிரின

ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை.

49. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி வாரியம்.

50. மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக காப்பீட்டுத் திட்டம்.

51. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மூடப்பட்ட

சிறு குறு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

52. மாவட்டத்திற்கென ஒரு தொழிற்பேட்டை.

53. பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை

54. கனிமங்களை அரசே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.

55. கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் கைவிடப்படும். எதிர்ப்பு

போராட்டத்தின்போது பொது மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள்

வாபஸ் பெறப்படும்.

56. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி

ஆணையம்.

57. சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை.

58. மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி, மதுரைக்கு விரிவாக்கம்.

59. கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மற்ற கடலோர மாவட்டங்களுக்கு

விரிவுபடுத்தப்படும்.

60. மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை.

Related Posts

‘முட்டை’ வடிவில் அணுகுண்டு வெடிக்கும் – டிடிவி. தினகரன்

  ‘முட்டை’ வடிவில் அணுகுண்டு வெடிக்கும். அப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் சிறைக்கு செல்வார்கள். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு…

டி.டி.வி. தினகரனை முதல்வர் ஆக்குவதே லட்சியம்: தங்கதமிழ்செல்வன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பழனியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தங்க தமிழ்…

பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி ஆறுதல்!

சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த கார் ஓட்டுநர் பாண்டித்துரைக்கு தினகரன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஆறுதல் கூறினர்.சென்னை…

டிடிவி தினகரன் பெயரை கேட்டாலே அதிரும் அமைச்சர்கள்!

TTV Dhinakaran Vs Ministers latest news video டிடிவி தினகரன் பெயரைக் கேட்டாலே நடுங்கும் அமைச்சர்கள் TTV Dhinakaran…

ஜெ. பாணியில் தினகரன்: மக்கள் மத்தில் வரவேற்பு!

ஜெ. பாணியில் தினகரன்: மக்கள் மத்தில் வரவேற்பு! வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:28 IST) ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share