தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!

By Admin - March 26th, 2019

Tags : AMMK, Cooker Symbol, TTV Dinakaran, அமமுக, குக்கர் சின்னம், டிடிவி தினகரன், Category : Tamil News,

‘அதிமுக’ என்ற பெயர் மற்றும் ’இரட்டை இலை’ சின்னம் தொடர்பான வழக்கில், ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்பே உண்மையான அதிமுக, அவர்களுக்கே ’இரட்டை இலை’ சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆனால் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து வரும் மக்களவை தேர்தலுக்காக அமமுகவிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ‘குக்கர்’ சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நேரில் ஆஜரான தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் சுதீப் ஜெயின், அமமுக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சி. எனவே அதற்கு நிரந்தர சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறினார். டிடிவி தினகரன் தரப்புக்கு தனி தனி சின்னம்தான் தர முடியும் என்று கூறினர்.

இந்நிலையில் ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால், அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி விடும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். இதற்கிடையில் குக்கரை போன்று பொதுவான சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பிற்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி தரப்பிற்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சட்டத்தில் இடமில்லை என்று ஆணையம் கூறியபோதிலும் பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்

‘வாரிசு அரசியல் குறித்து அடுத்தவர்களுக்குத்தான் அட்வைஸ், தனக்கு அது பொருந்தாது என ஓ.பி.எஸ் தன் மகனுக்கு சீட் கொடுத்துள்ளார்’ என…

திருவாரூர் தொகுதியில் முன்னிலையில் டிடிவி தினகரன்!

திருவாரூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் எதிர்க்கட்சியினரை டரியல் ஆக்கியுள்ளது. திமுக முன்னாள் தலைவரும்,…

அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வரும் மக்களவை தேர்தலில் தினகரன் தலைமையிலான அமமுக, எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை…

அவரின் வரவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம் !

சென்னை அசோக்நகரில் இன்று செய்தியாளர்கள் டிடிவி தினகரன் அவர்கள் சந்தித்தார், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கும் பரிசுப்பெட்டகம் சின்னம்…

முதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா் செல்வம் என்னை சந்தித்தாா் – தினகரன்

முதல்வா் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாத இறுதியில் கூட துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share