தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கவர்னரை குறை கூறியவர் இப்போது காஷ்மீரை தனி நாடு என்கிறார்!

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

பேராசிரியை நிர்மலா தேவி, தன்னிடம் பயின்ற மாணவியரை, உயர் அதிகாரிகளின் பாலியல் இச்சையை பூர்த்தி செய்ய அழைப்பபு விடுத்த ஆடியோ பதிவு கடந்த ஆண்டு வெளியாகி, தழிகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திடுக்கிடும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து நிர்மலா தேவி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் தொடர்பு இருப்பதாக, எதிர்க் கட்சிகள் உட்பட சில தரப்பினர் குற்றம் சாட்டினர். தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கவர்னர், இது குறித்து தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளித்த கவர்னரை, பத்திரிக்கையாளர்கள் சிலர் விடுவதாக இல்லை.
அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். அனைத்திற்கும் பதில் அளித்த கவர்னர், பத்திரிக்கையாளர் சந்திப்பின் நிறைவில், அங்கிருந்த பெண் பத்திரக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டி, மிகவும் துடிப்புடன் கேள்வி எழுப்புவதாக கூறினார்; அவரை பாராட்டினார். ஆனால், கவர்னர் தன் கன்னத்தில் தட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, பெண் பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்பிரமணியன், இது, தன் மீதான பாலியல் அத்துமீறல் எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த கவர்னர், தனக்கு 78 வயது ஆவதாகவும், தன் பேத்தி வயதில் இருக்கும் லட்சுமியை தான் தவறான எண்ணத்தில் தொட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். பெண் பத்திரிக்கையாளர் லட்சுமியின் இந்த புகார் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், கவர்னரின் விளக்கத்தை ஏற்பதாக அவர் கூறினார். இந்நிலையில், தி வீக் ஆங்கில பத்திரிக்கையில் பணியாற்றும் லட்சுமி சுப்பிரமணியன், தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவருடன், இந்திய மாநிலங்களில் ஒன்றான, ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த, சமூக செயல்பாட்டாளர், எழுத்தாளர் டெய்ஸி கான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் பைசா சியா ஆகியோரும் உள்ளனர். இந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள லட்சுமி, ‘இந்தியா, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான்’ என கருத்துப் பதிவிட்டுள்ளார். அதாவது, இந்தியாவை சேர்ந்த தன்னுடன், காஷ்மீர் நாட்டை சேர்ந்தவரும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் நிற்பதாக பொருள்படும் வகையில் கூறியுள்ளார். இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாக திகழும் காஷ்மீரை, ஏற்கனவே பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வருகிறது. அதை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி, தொடர்ந்து பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது. காஷ்மீரை காக்க, தினம் தினம் நம் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து வருகின்றனர். இப்படியிருக்கையில், தமிழகத்தை சேர்ந்த, இந்தியர் ஒருவர், அதுவும் பெண் பத்திரிக்கையாளர், காஷ்மீரை தனி நாடு என்ற வகையில் சித்தரித்து கருத்து பதிவிட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் அவரை பின்தொடருவோர் மற்றும் அவரது நண்பர்களே, லட்சுமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் கருத்து தெரிவித்துள்ள ஒருவர், உங்களின் இந்த கருத்து, மனதளவில் நீங்கள் பாகிஸ்தானியராக இருப்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். ”பொதுமக்களுக்கு, நாட்டு நிலவரத்தை நடுநிலை தவறாமல் எடுத்துரைக்கும் கடமையை செய்ய வேண்டிய பத்திரிக்கையாளர்களே, இது போல், நாட்டிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தால், அது, இளைய சமுதாயத்திற்கு தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும்” என, பத்திரிக்கையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். newstm.in
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?