தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

By Admin - March 23rd, 2019

Tags : Category : Tamil News,

தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் அவற்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி எனில் 40 பேரும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி எனில் 20 பேரும் நட்சத்திர பேச்சாளர்களாக பதிவு செய்யலாம். அரசியல் கட்சிகள் அளித்த பட்டியலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: அதிமுக: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள் அன்வர்ராஜா, வைத்திலிங்கம், விஜிலா சத்யானந்த், அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வைகைச் செல்வன் உள்ளிட்ட 40 பேர்.
திமுக: திமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்பட 40 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 40 பேரும் நட்சத்திர பேச்சாளர்களாக உள்ளனர். தே.மு.தி.க., சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட 40 பேரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா உள்பட 20 பேர் நட்சத்திர அந்தஸ்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். திமுக, அதிமுக கட்சிகளில் உள்ள கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share