தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

மலர்ந்த தாமரையை தேர்தல் கமிஷன் அழித்ததால் தமிழிசை ஆவேசம்!

By Admin - March 16th, 2019

Tags : BJP, Election 2019, Lotus, Tamarai, Tamilisai, Category : Tamil News,

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் போடப்பட்ட கோலத்தில்தாமரை இருந்ததால் அதனை சுண்ணாம்பு கொண்டு அழித்ததற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருவிழாவுக்காக போடப்பட்டிருந்த கோலங்களில் தாமரை இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, கட்சியின் சின்னம் என்று கூறி சுண்ணாம்பு கொண்டு அழிக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழிசை நேற்றுவெளியிட்டுள்ளஅறிக்கையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டு காலமாக வரையப்படும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்துள்ளனர். அது தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படியென்றால் ‘கை’ காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது. தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா? இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்புகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதையடுத்து,தேர்தல் கமிஷன், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க உள்ளது.

Related Posts

தூத்துக்குடி மாவட்டம் தட்டாா்மடத்தில் கட்சி கொடியேற்றி வைத்த தமிழிசை!

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் சாத்தான்குளம் ஒன்றியம் தட்டாா்மடத்தில் கட்சி கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றிய தமிழிசை

பொன் ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் ஓபிஎஸ் தனியாக பேசியது என்ன?

முதல்வர், அமைச்சர்கள் யாரும் உடன் இல்லாமல் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் பத்து நிமிடங்கள் தனியாக பேசிக்கொண்டிருந்தார் துணை முதல்வர்…

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு 1. தூத்துக்குடி-தமிழிசை 2.கன்னியாகுமரி-பொன் இராதாகிருஷ்ணன் 3.சிவகங்கை-எச் ராஜா…

சசிகலா நினைத்திருந்தால் தமிழக முதலமைச்சராகி இருப்பார் – தினகரன்

மோடியின் கட்டளைப்படியே மறுபடியும் கட்சியில் இணைந்ததாகவும், துணை முதலமைச்சர் பதவியை பெற்றதாகவும் பன்னீர் செல்வம் சொல்வதன் மூலம், பாஜக மற்றும்…

மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. குருமூர்த்தி ஆரூடம்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். ஆனால் பாஜகவுடன் அவர் கை கோர்க்க வேண்டும் என துக்ளக் ஆசிரியரும்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?