தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

By Admin - March 26th, 2019

Tags : BJP, G K Vasan, TMK, Category : Tamil News,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ள நிலையில், தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகா தலைவரானார். 2002-ல் தமாகா கட்சியை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விலகியதால் ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில், தங்களுடைய கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம், 8 வாரத்தில் முடிவெடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.ஆனால், இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து, கட்சி தலைவரான ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என்ற பிரதான மனு மீதான விசாரணையை தேர்தலுக்கு பிறகு ஒத்திவைத்தனர்.

சைக்கிள் சின்னம் வழங்க குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Posts

பாராளுமன்றத்தை முடக்க அதிமுகவை பாஜக பயன்படுத்திக் கொண்டது – ஜெய்ராம் ரமேஷ்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தது.  அதிமுக…

தூத்துக்குடி மாவட்டம் தட்டாா்மடத்தில் கட்சி கொடியேற்றி வைத்த தமிழிசை!

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் சாத்தான்குளம் ஒன்றியம் தட்டாா்மடத்தில் கட்சி கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றிய தமிழிசை

அதிமுக தேர்தல் அறிக்கை!

திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை…

ஜெயலலிதா கட்டவுட் வைக்க மறுத்த பாரதிய ஜனதா

வண்டலூர் பொதுக்கூட்டத்தில் #அம்மா அவர்களின் கட் அவுட் வைக்க பாரதிய ஜனதா ஏற்காததால் ஓரமாக வீசி எறியப்பட்ட #அம்மா அவர்களின்…

சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?

சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா? # சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் # இல்லையேல் இல்லாமல்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share