தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சிவகங்கை தொகுதியில் எளிதாக வெற்றி பெற காத்திருக்கும் அமமுக!

By Admin - March 5th, 2019

Tags : AMMK, Sivakangai, TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தனித்துப் போட்டியிடும் அமமுக, மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் போட்டியிட களமிறங்கியுள்ளது. இத்தொகுதி அதிமுகவுக்கு சவாலாக இருப்பதால் அக்கட்சியினர் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதால் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது மகனுக்காக தொகுதியை தயார்படுத்தி வருகிறார். அதிமுக கூட்டணியில் யாருக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்ற நிலையில் கட்சியினரிடையே குழப்பம் நிலவுகிறது.

அதிமுகவுக்குப் போட்டியாக அமமுகவும் களத்தில் இறங்குவதால் அதிமுகவினர் கிலியில் உள்ளனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட அமமுகவின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே.உமாதேவன், பேரவை மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அன்பரசன், துணைச் செயலாளர் குரு.முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ் மகன் அந்தோணிராஜ் ஆகியோர் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியில் அதிமுகவுக்குள் ஈபிஸ், ஓபிஸ் அணியாக பிரிந்திருந்தாலும் வெளியில் தெரியவில்லை. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி ஆகிய 2 தொகுதிகளில் ஈபிஸ், ஓபிஎஸ் அணியினர் கோஷ்டியாக செயல்படுவதால் நடந்து முடிந்த கூட்டுறவுத் தேர்தலில் இரு அணியினரும் முட்டி மோதி பிளவுபட்டுக் கிடக்கின்றனர். அதிமுகவில் தலைமை மீது வெறுப்பில் உள்ள கட்சித் தொண்டர்களை அமமுக தன் வசப்படுத்துவதால் தொகுதியில் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி வரையறைக்கு முன் மானாமதுரை தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்தபோது போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக முன்னாள் எம்பி மலைச்சாமி பேசும்போதெல்லாம், தனது வெற்றிக்கு காரணமான மானாமதுரை தொகுதியை ‘மானம் காத்த மானாமதுரை தொகுதி’ என அடைமொழியுடன் பேசுவதுண்டு. அவ்வாறே அதிமுகவினரும் அடை மொழியுடன் அழைத்து வந்தனர்.

இத்தொகுதியில் 2016 தேர்தலில் அதிமுக மாவட்டச் செயலாளர் பெரி.செந்தில்நாதனின் ஆதரவாளரான மாரியப்பன் கென்னடி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அவர் டிடிவி.தினகரன் அணிக்குச் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அமமுகவின் அம்மா பேரவை மாநிலச் செய லாளராகவும், தேர்தல் மண்டலப் பொறுப்பாளராகவும் உள்ள மாரியப்பன் கென்னடி, இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிவாகை சூட வேண்டும் என தேர்தல் பணியில் இறங்கியுள்ளார். இத்தொகுதியைச் சேர்ந்த இளையான்குடியில் சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பதால் அதிமுக- பாஜக கூட்டணியை விரும்பாத இவர்களின் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இது அமமுகவுக்கு கூடுதல் வாய்ப்பாகும்.

அதிமுகவின் வெற்றி வாய்ப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் அக்கட்சியினர் கிலியில் உள்ளனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுகவினரும் களப்பணியைத் தொடங்கி விட்டனர். ஆனால், மானாமதுரை தொகுதியில் அதீத அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர்.

Related Posts

ஜெயலலிதா சிலைக்கு 4 முலம் வேட்டி: பிஜேபியின் ஆலோசனையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அவமரியாதை

சென்னை: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு முன் அந்த சிலையை 4 முலம் வேட்டி போட்டு மூடி வைத்திருந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை…

ஆர்.கே. நகர் மக்களை தரம் தாழ்ந்து நடிகர் கமல் ஹாசன் விமர்சனம் செய்யக் கூடாது

ஆர்.கே. நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்று கமல் ஹாசன் கூறியிருப்பதற்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ., தினகரன் கண்டனம்…

திருமங்கலம் பொதுக்கூட்டம் ஒரு மாநாடா? படங்கள் உங்கே

டிடிவி தினகரன் அணி திருமங்கலம் பொதுக்கூட்டம் மாநாடா? டிடிவி தினகரன் அணி

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு மறைந்த முதலமைச்சர் இதயதெய்வம் அம்மாவின் 70-ம் ஆண்டு பிறந்தநாள் விழா…

என் மண்ணில் வைரமே கிடைத்தாலும் வெட்டி எடுக்கவிடமாட்டேன் – டி.டி.வி தினகரன்

விவசாயம் என்பது தொழில் கிடையாது வாழ்க்கை முறை. டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என நான் கடந்த வருடமே…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share