தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! டிடிவி தினகரனின் புதிய தேர்தல் வியூகம்!

By Admin - March 12th, 2019

Tags : AMMK, Election 2019, TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்தலுடன் 18 சட்டப்பேர்வை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு இப்போது தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம், ஒசூர் ஆகிய தொகுதிகளுக்கு பாமகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

இந்தத் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளதால் வட மாவட்டங்களில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் கொடுத்து அதிமுக கூட்டணியை உறுதி செய்ததாக தகவல் வெளியாகியது.

வட மாவட்டங்களைப் போலவே, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், பரமக்குடி, மானாமதுரை, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர் ஆகிய 7 தொகுதிகளிலும் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மற்ற இரு தென் மாவட்ட தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரத்தில் தற்போது தேர்தல் நடைபெறவில்லை. வட மாவட்டங்களைப் போலவே, தென் மாவட்டங்களில் உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலும் அதிமுகவுக்கு மிக முக்கியம்.

தென் மாவட்ட தொகுதிகளைப் பொறுத்தவரை தினகரனின் அமமுகவுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தவிர, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பரமகுடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குப்பட்ட மானாமதுரையிலும், திண்டுக்கல் தொகுதிக்குப்டபட்ட நிலக்கோட்டையிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதபோலவே, விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சாத்தூரிலும், தூத்துக்குடி தொகுதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

எனவே தென் மாவட்டங்களில் தங்களுக்குக் கணிசமான வாக்கு வங்கியுள்ள தேனி, திணடுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அந்த மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், அதற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக அரசு தொடராமல் தடுக்க முடியும் என தினகரன் நம்புவதாகத் தெரிகிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதுடன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக அரசுக்கு நெருக்கடி தரவும் முடியும். எனவே தென் மாவட்ட தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அறிவுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஏற்ப அமமுகவின் வியூகம் மற்றும் பிரச்சாரங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Related Posts

செந்தில் பாலாஜியின் கட்சி தாவல் வரலாறு : ஸ்பைடர் மேன் செந்தில் பாலாஜி

கடந்த சில நாட்களாகவே தினகரனுக்கும் செந்தில் பாலாஜி கும் பனிப்போர் நடந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது, மேலும் அவர்கள் தொடுத்த தகுதி நீக்க…

டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார் வேல்முருகன்?

இதனிடையே டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை…

திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமமுக மாநில அமைப்புச்…

விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மயிலம் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள்செல்வர் TTV Dhinakaran in Villupuram

விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மயிலம் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள்செல்வர் TTVDhinakaran TTV TamilNadu TNPolitics TNCM Villupuram

இன்னும் தேர்தல் தேதி அறிவிப்பு வரல, அமமுக பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டது!

இன்னும் தேர்தல் தேதி அறிவிப்பு வர்ல அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டார்கள். #திருவாரூர்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?