Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!


தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி மனு அளித்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிக்கும், வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி அறிவித்தது.
இதையடுத்து திமுக சார்பில் 4 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு நேற்று பெறப்பட்டது. இதை தொடர்ந்து இன்று அல்லது நாளை 4 தொகுதிக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, அமமுக சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை கூறியுள்ளது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வேட்பாளர் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் 4 சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 29ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 30ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மே 2ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலையே 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 2ம் தேதி மாலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த 4 தொகுதியில் பதிவாகும் வாக்குகள் வருகிற மே 23ம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுடன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளதால், இன்னும் ஒரு சில தினங்களில் அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கும். தற்போது திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 1ம் தேதி முதல் ஓட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 8 நாட்கள் 4 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார். அதே போன்று திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். அதே போன்று அதிமுக, அமமுக, மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியானவுடன் அக்கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கவுள்ளனர். இதனால், மீண்டும் தேர்தல் பிரசார களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 30ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மே 2ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெறலாம்.



தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

Related Posts

பெங்களூரு சிறையில் சசிகலா பிறந்தநாள் கொண்டாட்டம்; நேரில் சந்தித்து டிடிவி தினகரன் வாழ்த்து

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்…


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகம்?

ஆட்சிக்கான ஆதரவை ஆளுங்கட்சியில் ஒரு குழுவோ அல்லது கூட்டணி ஆட்சியாக இருக்கும்பட்சத்தில் சக கூட்டணிக் கட்சியோ வாபஸ் வாங்கலாம். ஆனால்,…


மோடியை நம்பினால் நாமம் தான் கிடைக்கும் வேறு எதுவும் கிடைக்காது : நடிகர் செந்தில்

அரசு கல்லூரி கட்ட இடம் கொடுத்த அ.ம.மு.க வேட்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு வாக்களியுங்கள் திசையன்விளையில் நடிகர் செந்தில் பிரசாரம் திசையன்விளை,…


கருணாநிதி உடலுக்கு டிடிவி தினகரன் முதல் ஆளாக அஞ்சலி!

ராஜாஜி மஹாலில் உள்ள கருணாநிதி உடலுக்கு டிடிவி தினகரன் முதல் ஆளாக அஞ்சலி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி…


அதிமுக, திமுகவுக்கு தேர்தல்னாலே பயம் : டிடிவி தினகரன்

திருவாரூர் இடைத் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியைப் போல எதிர்க்கட்சியான திமுகவும் பயப்படுகிறது என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன்…




அண்மை செய்திகள்