Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

#BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை


டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுக்கு எதிராக உள்ள 2 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால், அரசு கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளனர்.அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் தற்போது, அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.

இதனால், 5 பேரிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இதற்காக, அரசு கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் உடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

5 பேர் அளிக்கும் விளக்கத்தை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாக இருந்த 23 சட்டமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.இதன் முடிவுகள் மே 23-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.




மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு?

பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

Related Posts

கலைஞர் – ஜெயலலிதாவுக்கு கூட இப்படி ரசிகர் பட்டாளம் இருந்து பார்த்ததில்ல!

மக்கள் தலைவன் டி.டி.வி யின் சிறப்பு … நேற்று நடந்த சுவையான சம்பவம் – திருநெல்வேலி மாவட்டத்தில் …. திருநெல்வேலி…


ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி! பிரச்சாரத்தில் கலகல!

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லி பிரச்சாரங்கள் செய்து…


உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட அவமானத்தை எப்படி தொடைக்க போறீங்க சாமி? கமல்ஹாசன் கேள்வி!

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…


நான்கு கட்சிகளுடன் கூட்டணி : டிடிவி.தினகரன் பேட்டி

நான்கு கட்சிகளுடன் கூட்டணி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை விரைவில் முற்றுபெறும் தி ஹிந்து நாளிதழுக்கு டிடிவி.தினகரன் பேட்டி கேள்வி 1:…


“திருவாரூர் கருணாநிதி தொகுதி மட்டுமல்ல” இனி எனது தொகுதி – தினகரன்

கருணாநிதி இருந்தவரை மட்டுமே திருவாரூர் அவரது தொகுதி என்றும், இனி திருவாரூரில் அமமுக மட்டுமே வெற்றி பெறும் என்றும் தினகரன்…




அண்மை செய்திகள்