தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அதிமுக எம்.பி ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்

By Admin - April 13th, 2019

Tags : J K Ritesh, RIP J K Ritesh, Category : Tamil News,

முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

‘சின்னபுள்ள’ படத்தில் அறிமுகமான இவர் ‘நாயகன்’ என்ற படத்தைத் தயாரித்து தானே ஹீரோவாகவும் நடித்தார். அதுவரை ஜே.கே.ரித்தீஷ் என்றால் யாருக்குமே தெரியாது. அதன்பின்னர் அவர் பிரபலமானார். திரையுலகில் அனைவருக்கும் உதவி செய்வது, சங்கப்பணிகளில் வேகம் காட்டியது அவரை வேகமாக திரையுலகின் முக்கிய பிரமுகராக்கியது.

2014-ம் ஆண்டு திமுகவிலிருந்து திடீரென அதிமுகவிற்கு தாவினார் ரித்தீஷ். அதன்பின்னர் இன்னும் செல்வாக்குடன் இருந்த அவர் உதவியால் விஷால் நடிகர் சங்கத்தைக் கைப்பற்ற முடிந்தது. அதன்பின்னர் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எதிரணிக்குத் தாவினார்.

இந்நிலையில் அதிமுக அணியில் உள்ள அவர் தனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள பரணிகுமார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு கடுமையான மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தற்போது ஜே.கே.ரித்தீஷ் உடல் ராமநாதபுரம் சேதுபதி நகரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளது.

ரித்தீஷ் மரணம் திரையுலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share