Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கும் தொடங்கிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்த்தது . கொல்கத்தா அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் லின் 51 ரன்னும், சுனில் நரைன் 25 ரன்னும், ரிங்கு சிங் 31 ரன்னும் எடுத்தனர். ஐதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 160 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 161 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான வார்னர் 67 ரன் எடுத்து அவுட் ஆனார். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 80 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by . Publisher: Dina Seithigal











Latest Stills of actress Manjusha Anchor

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்



அண்மை செய்திகள்