Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை - பிரபல நடிகை


சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார்.அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் சில காட்சிகளை பார்த்த தயாரிப்பளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். நடிப்பில் அஜித் மிரட்டியிருக்கிறார். விரைவில் இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்காக 3 ஆக்‌ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றையாவது தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.



இந்த பதிவுக்கு பதில அளித்த நடிகை நீத்து சந்திரா, ‘சூப்பர் ஸ்டார் அஜித்குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவரை பாலிவுட்டில் நடிக்க சம்மதிக்க வையுங்கள். அது இந்தி சினிமாவுக்கே பெருமை.  உங்களுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்

I would love to be a part of Actor Superstar #Ajith s action movie. He has always been my favourite action actor. Please convince him soon! That's will be a blessing to Hindi cinema. Great Luck @BoneyKapoor ji https://t.co/jEfjVvHxih
— Neetu N Chandra (@Neetu_Chandra) April 25, 2019


தமிழில் மாதவனுடைய யாவரும் நலம், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.





பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

Related Posts

ஒரு படத்தின் ரிலீஸிற்கு பின் அஜித் என்ன செய்வார்?

அஜித் விஸ்வாசம் வெற்றியால் எவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரது ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதுவும்…


Vivegam releasing worldwide today. BLOCKBUSTER early reviews

#Vivegam releasing worldwide today. BLOCKBUSTER early reviews. Congrats #Thala #Ajith @directorsiva @anirudhofficial @vetrivisuals & team.


சங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்!

Thala Ajith next movie with Director Shankar விவேகம்’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரம்மாண்ட…


விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டர் செய்த சூப்பர் சாதனை! கலர்புல் அஜித் – லிஸ்ட் இதோ

விஸ்வாசம் படத்தால் அஜித் ரசிகர்கள் இப்போது மாஸான கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். சிவா, அஜித் கூட்டணியில் நயன்தாரா இணைந்துள்ளார். விஸ்வாசம் படத்தின்…


The thing for which you Eagerly Waits for

The thing for which you Eagerly Waits for.. #Vivegam Latest Stills in HQ #Thala #Ajith…




அண்மை செய்திகள்