Thu. Jul 18th, 2019

Tamil News

Latest Tamil News , Tamil Cinema updates, Political Tamil News, Tamil Actress HD stills, Tamil Cinema First look, Trailors, Teasers and Shooting spot updates

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

1 min read

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்
அதிரடியாக ஆடிய தோனி, 48 பந்துகளில் 5 பவுன்டரி, 7 சிக்ஸர்களுடன் 84 ரன்களைக் குவித்தார்.

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல் சீசனின் 39-வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி களமிறங்கியது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

அடுத்த களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ஷான் வாட்சன் 5 ரன்களிலும், டூ ப்ளிஸிஸ் 5 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி திணறிய நிலையில், அம்பதி ராயுடு நிதான ஆடி 29 ரன்களைச் சேர்ந்தார். கேதர் ஜாதவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக இறங்கிய தோனி, எதிரணியின் பந்துகளை சிதறடித்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்த நிலையில், தோனி தனி ஒருவனாக பெங்களூரு அணியின் பந்து வீச்சைத் சிதறடித்தார். அதிரடியாக ஆடிய தோனி, 48 பந்துகளில் 5 பவுன்டரி, 7 சிக்ஸர்களுடன் 84 ரன்களைக் குவித்தார். இறுதி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்று சிக்ஸ்கள், ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு ரன்கள் அடித்தார் தோனி.

இறுதி ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி பந்தை தோனி அடிக்கவில்லை. மறுபுறம் இருந்த ப்ரோவோ இந்த எல்லையை அடையும் விக்கெட் கீப்பர் படேல், அவரை ரன் அவுட் செய்தார். அதன்மூலம், பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.