Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது?


இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் இணைந்து இருக்கும் குழுவில் சக நாடுகள் பரிந்துரைத்த பெயர்களின் அடிப்படையில், 8 நாடுகளில் கடற்பரப்பில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கப்படுகிறது.

கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை உண்டாக்கிய ’கஜா’ புயலின் பெயர் இலங்கை பரிந்துரைத்தது. இதன்பின்னர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ’பேத்தாய்’ புயலின் பெயர் தாய்லாந்து நாடு கொடுத்தது.தற்போது, வங்கக்கடலில் உருவாக உள்ள ’ஃபானி’ புயலின் பெயர் வங்காளதேசம் பரிந்துரைத்தது. இதற்கு அடுத்ததாக உருவாக உள்ள பெயருக்கு இந்தியா பரிந்துரைத்த ’வாயு’ என்று சூட்டப்படும். அதன் பின்னர், மாலத்தீவு பரிந்துரைத்த ’ஹிகா’ என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும்.

படிக்க... காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாற வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

ஃபானி புயலுக்கு அடுத்தபடியாக, 7 புயல்களுக்கு பெயர்கள் சூட்ட ஏற்கனவே பரிந்துரைத்த பட்டியல் உள்ளது. அதன் பின்னர், புதிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படும்.

கடந்த 200-ம் ஆண்டில் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. 8 நாடுகளின் புயல் பட்டியல் சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகிறது.

படிக்க... சித்திரையில் வரும் புயல் ஆபத்தானது - பாரம்பரிய கணிப்பு மூலம் மீனவர்கள் அச்சம்

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா  உருவாக்கியது.

1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டத் தொடங்கியது. கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.




எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் 29-ம் தேதி வெளியீடு!

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!

Related Posts

தமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையில், அந்தர்பலடி அடித்த வானிலை மையம்.!

ரெட் அலர்ட் எச்சரிக்கையானது தமிழக மக்களுக்கு இல்லை, நிர்வாகத்திற்கு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாக்கி உள்ள காஜா…




அண்மை செய்திகள்