ஆவேசமாக பாயும் பாஜக, அதிமுக.. கமலை காக்க கை கோர்க்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்


கமலின் பேச்சுக்கு திமுக, அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சென்னை: எவ்வளவுக்கெவ்வளவு அதிமுக-பாஜக தரப்பு கமலை நோண்டி நுங்கெடுத்து வருகிறதோ, அதே அளவுக்கு கமலுக்கு ஆதரவு தந்து அரணாக வந்து நிற்கின்றன திமுகவும், அதன் தோழமை கட்சிகளும்! ஏற்கனவே நெருங்கி இருக்க வேண்டியவர்கள்தான்.. சேர்ந்திருக்க வேண்டியவர்கள்தான்.. அப்படித்தான் ஒரு எதிர்பார்ப்பு இவர்கள் மேல் ஏற்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ, கமலும், ஸ்டாலினும் விலக தொடங்கினர். ஸ்டாலின் மீது கமலும், கமல் மீது ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்ந்து காரசார விவாதங்களை செய்து கொண்டனர்… அளவுக்கு அதிகமாகவே விமர்சனம் செய்து கொண்டனர்! ஆனால் சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சபாநாயகர் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக சொன்னார். தீர்மானம் "3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் என்றாலும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரலாம்" என்றார். கமலின் இந்த பேட்டி திரும்பவும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமா என தெரியவில்லை.ஆட்சி கவிழ்ப்பு இப்படி ஒரு ஆதரவு மூலம் திமுக பக்கம் கமல் சாய தொடங்கி உள்ளார் என்று எடுத்து கொள்வதா, அல்லது அதிமுகவை கவிழ்க்க யாருடன் வேண்டுமானாலும் இணைந்து தனது ஆதரவை தர கமல் முன் வந்துள்ளார் என்று எடுத்து கொள்வதா என்று தெரியாமலேயே இருந்தது.ராஜேந்திர பாலாஜி இப்போது யு-டர்ன் அடித்து திமுகவும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, கமலின் நாக்கை அறுப்பேன் என்று சொன்ன ராஜேந்திர பாலாஜியின் வாலை நறுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாலர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக தெரிவித்துள்ளார். திமுக என்றில்லை, அதன் கூட்டணி கட்சிகளும் கமல் பேச்சை ஆமோதிக்கவே செய்து, ராஜேந்திரபாலாஜியை நொறுக்கி எடுத்து விட்டன.தவறு இல்லை ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்வதோடு, கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரியும், திக தலைவர் வீரமணியும் ஆதரவு சொல்லி உள்ளனர். காந்தி சிலையை சுட்டு கொண்டாடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, இந்து தீவிரவாதம் குறித்து கமல் கூறியதில் தவறில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.முரசொலி என்னதான் பாஜகவும், அதிமுகவும் திமுக கூட்டணிகளுக்கு எதிரான கட்சிகள் என்று எடுத்து கொண்டாலும், கமல் பற்றின பேச்சுக்கு வலிந்தும், ஆதரித்தும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான். இதே கமல் பற்றி அன்று முரசொலியில் கண்டனம் எழுந்த நிலையில், இன்று அதே திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் தடம் மாறி ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ளது பார்க்கவும், கேட்கவும், ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*