அட கடவுளே.. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு.. 6 கல்லூரிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல!!


சென்னை: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதன் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.
தேர்ச்சி விவரம் இணையத்தில் வெளியீடு இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. 6 கல்லூரிகள் ஒருவர் கூட தேர்ச்சியில்லை தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் 682 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். 59 கல்லூரிகள் 3 கல்லூரிகள் மட்டும் 59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூயில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. எண்ணிக்கை குறைவு அதிர்ச்சி ஏற்கனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த தேர்வு முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.