Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

விரைவில் ‘பிக் பாஸ் 3’: விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு , கலந்துகொள்ளும் 3 திரை நட்சத்திரங்கள்!


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் திரைபிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 2017-ம் ஆண்டு ஆரவ் வெற்றியாளராகவும்  2018-ம் ஆண்டு நடிகை ரித்விகா வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.அதேபோல் இந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.

😎 பிக்பாஸ் 3 விரைவில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 @ikamalhaasan #VijayTelevision pic.twitter.com/g2WjTYC7E9
— Vijay Television (@vijaytelevision) May 15, 2019
முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதை மூவருமே மறுத்தனர். அதேவேளையில் நடிகை சாந்தினி தமிழரசன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார்.

தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மேலும் 3 பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஆல்யா மானஷா

நடிகை சாக்‌ஷி அகர்வால்

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

அதில் சின்னத்திரை நடிகை ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியலை விஜய் டிவி நிர்வாகம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

மேலும், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் சங்கமம் - கண்கவர் ஆடைகளுடன் வந்த நடிகைகள்!




என் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுங்கள்.. ஹைகோர்ட் கிளையில் கமல் மனு

ஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்!

Related Posts

பிக்பாஸ் ஓவியாவை போல எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதிக்கும் அடித்த லக்

அந்த நிகழ்ச்சி ஓவியாவின் சினிமா வாழ்க்கையை மாற்றியிருந்தது, படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருந்தார். தற்போது தன்…


Bigg Boss Tamil contestants Gayathri and Bindhu Madhavi at Night party

Bigg Boss Tamil contestants Gayathri and Bindhu Madhavi at Night drinks party


ஓவியாவுக்காக தன் முழு திறமையை காட்டும் நடிகர் சிம்பு! – tamil

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம். நடிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்…


பிக்பாஸ்-3 வீட்டிற்குள் போகும் முதல் போட்டியாளர் நம்ம ஜாங்கிரி!

பிக்பாஸ் போட்டி ரசிகர்களிடம் செம்ம பேமஸ். இந்த நிகழ்ச்சி வருடாதோறும் ரசிகர்களை செம்ம குஷிப்படுத்தி வருகின்றது. ஏனெனில் எப்போதுமே பக்கத்து…


பிக்பாஸ் 3-ல் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து…




அண்மை செய்திகள்