விரைவில் பிக்பாஸ் 3 – விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வெளியாகும் என்று விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 2017-ம் ஆண்டு ஆரவ் வெற்றியாளராகவும்  2018-ம் ஆண்டு நடிகை ரித்விகா வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.அதேபோல் இந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றியுள்ளார். விரைவில் நிகழ்ச்சியில் பங்கேற்போர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

😎 பிக்பாஸ் 3 விரைவில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 @ikamalhaasan #VijayTelevision pic.twitter.com/g2WjTYC7E9
— Vijay Television (@vijaytelevision) May 15, 2019
ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*