புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்.. ராணுவத் தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொலை


ஸ்ரீநகர்: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் 3 பேர் பலியாகிவிட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரர் வீரமரணமடைந்தார். தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தாலிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ஊருடுவியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம், சிஆர்பிஎஃப் படை வீரர்கள் என சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த பரஸ்பர துப்பாக்கிச் சண்டையில் ஒரு பாதுகாப்பு வீரர் சந்தீப் வீரமரணமடைந்தார்.
மேலும் ஒரு வீரரும் அப்பகுதிவாசியும் காயமடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் புல்வாமாவை சேர்ந்த நசீர் பண்டித், சோபியானை சேர்ந்த உமர் மிர், பாகிஸ்தானை சேர்ந்த காலித் பாய் ஆகியோராவர். இவர்கள் மூவரும் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வெடிப்பொருள்களை ஏற்றிக் கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி, வீரர்களின் வாகனங்களின் மீது மோதினார். இதில் 40 சிஆர்பிஎஃப் படையினர் பலியாகிவிட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் வான்வழி தாக்குத்ல நடத்தி அந்த தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. இதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக இந்திய வான்வெளி எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்த ஊடுருவின. அவற்றையும் இந்திய விமான படை சாதுர்யமாக செயல்பட்டு புறமுதுகிட்டு ஓட செய்தது. இத்தனை நாட்களாக வாலை சுருட்டி வைத்திருந்த தீவிரவாதிகள் இன்று புல்வாமாவில் மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அவர்களை இந்திய ராணுவமும், துணை ராணுவமும், போலீஸும் திறமையாக கையாண்டன.
Jammu and Kashmir: Army Jawan Sepoy Sandeep (in pic) who lost his life in Pulwama encounter earlier today; three terrorists were neutralised in the encounter.
– ANI (@ANI)