Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

என் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுங்கள்.. ஹைகோர்ட் கிளையில் கமல் மனு



மதுரை: தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட்டில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். பள்ளப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை கமல் பேசிய பேச்சுதான், கோர்ட்வரை கொண்டு இழுத்துவந்து விட்டது. இப்போதுவரை பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டவர்களின் புகார்கள், கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி, டெல்லி பாட்டியாலா கோர்ட் முதல் மதுரை ஹைகோர்ட் வரை கேஸ் போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி போலீசில் புகார் மேலும் இந்து முன்னணி, கரூர் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன், 'இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிய, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரவக்குறிச்சி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். கலவரம் வழக்கு பதிவு இந்த புகாரின்படி கமல் மீது, 153ஏ - மதத்தினர் இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரியபடி பேசுவது, 295ஏ - ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றி பேசுவது ஆகிய பிரிவுகளில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை ஐகோர்ட் அவசர வழக்கு இவை இரண்டுமே ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆகும். அதனால் தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கமல் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. விடுமுறை முன்ஜாமீன் ஆனால் விடுமுறை கால நீதிமன்றத்தில் ரத்து வழக்குகளை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் நாளையே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.



ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!

விரைவில் ‘பிக் பாஸ் 3’: விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு , கலந்துகொள்ளும் 3 திரை நட்சத்திரங்கள்!



அண்மை செய்திகள்