Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

எட்டப்பனுக்கு எடப்பாடி பழனிசாமி படம் பொருத்தமாக இருக்கும் - டிடிவி தினகரன் அசத்தல் பேச்சு


வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து பொட்டலூரணியில் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ’’ஜெயலலிதா மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைக்கு இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இதனால்தான் அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம். மோடிக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்..? இவர்கள் அண்ணா படத்துக்கு பதிலாக, மோடி படத்தை வைத்தாலும் வைப்பார்கள். இதனை தடுக்கதான் நாங்கள் வந்துள்ளோம்.


அதிமுக மூடப்பட இருக்கும் கம்பெனி. அந்த கம்பெனியில் தொண்டர்கள் இல்லை. அத்தனை தொண்டர்களும் எங்களிடம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், தற்போது தினகரன் கட்சி ஆரம்பித்து உள்ளார். அது தமிழகத்துக்கு பிடித்த பிணி என்று கூறி உள்ளார். நான் அதிமுக துரோகிகளுக்குதான் பிணி. அவர் பா.ஜகவில் சேர்ந்து விட்டு, ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்.


ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதி கொடுத்து விட்டனர். பின்னர் எப்படி அம்மாவின் ஆட்சி என்று சொல்ல முடியும்? அவர்களுக்கு அப்படி சொல்ல தகுதி இல்லை. துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது. வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.



அலையில் சிக்கி 4 மாணவர்கள் கடலில் மூழ்கினர்

இரவு நேரங்களில் பேருந்தை கற்களால் தாக்கும் கும்பல் கைது

Related Posts

விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மயிலம் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள்செல்வர் TTV Dhinakaran in Villupuram

விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மயிலம் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள்செல்வர் TTVDhinakaran TTV TamilNadu TNPolitics TNCM Villupuram


அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்

சென்னைமுதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர்…


டிடிவி தினகரனோடு கூட்டணி செல்ல விரும்பும் விஜயகாந்த்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ்…


திணறடிக்கும் வேகத்தில் தினகரன்! தேர்தலுக்கு முதல் வேட்பாளரை அறிவித்ததால் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்! 

திண்டுக்கல்  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இருந்து விமானம்…


தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என மோடி நினைத்துவிட்டார்.. டிடிவி தினகரன் தாக்கு

சென்னை: தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என பிரதமர் மோடி நினைத்து விட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அம்மா…




அண்மை செய்திகள்