இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது


மும்பை: இந்துக்களுக்கு எதிராகவும் பிராமணர்களுக்கு எதிராகவும் பேஸ்புக்கி கருத்து வெளியிட்டதாக மருத்துவர் ஒருவரை மும்பை போலீஸ் கைது செய்தது. மும்பையில் விக்ரோலியை சேர்ந்தவர் சுனில்குமார் நிஷாத் (38). இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். இந்த மாத தொடக்கத்தில் இவர் இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவீந்திர திவாரி மற்றவர்கள் மூலம் நிஷாத் இது போன்ற கருத்துகளை போட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். ஆனால் நிஷாத்தோ தான் போடும் கருத்துகளால் திவாரிக்கு பிரச்சினை என்றால் தாராளமாக தன் மீது புகார் அளிக்கலாம் என சவால் விடுத்துள்ளார்.
இதையடுத்து நிஷாத் மீது திவாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நிஷாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸார் தன்னை தேடுவது குறித்து நிஷாத் அறிந்து கொண்டார். இதையடுத்து கைது செய்யப்படாமல் இருப்பதற்காக மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர். மத நம்பிக்கையை சிதைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது போல் குறிப்பிட்ட மதம், இனத்திற்கு எதிரான கருத்துகளை அவர் கடந்த இரு ஆண்டுகளாக பகிர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*