கமல்ஹாசன் மீது கொந்தளித்து தெருவுக்கு வந்து கொடும்பாவி கொளுத்திய.. வெறும் 4 பேர்!


வேலூர்: அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் முன்வைத்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட உருவபொம்மை எரிப்பில் வெறும் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டது பெரும் கேலிக்கூத்தாக முடிந்தது. அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவித்தனர். கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் சில அமைப்புகள் நீதிமன்றங்களிலும் காவல் துறையிலும் புகார் மனுக்களை அளித்து வருகின்றன. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியில் இந்து மக்கள் சார்பில் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சை கண்டித்தும் கோட்சேவை எப்படி தீவிரவாதி என சொல்லலாம் என கோஷமிட்டும் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்தனர். ஏதோ 30- 40 பேர் உருவபொம்மையை எரிப்பார்கள் என்று பார்த்தால் அங்கு வெறும் 4 பேர் மட்டுமே இருந்தது பார்ப்போரை வயிறு குலுங்க சிரிப்பை வரவழைத்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*