கருணாநிதியின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்கவேண்டும் – தமிழிசை விருப்பம்

கருணாநிதியின் மகன் ஸ்டாலின் நீண்ட காலம் அரசியலில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்தாா். இந்த பேட்டி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியது.

தமிழிசையின் பேட்டிக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், “பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக நான் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயாா். அதே நேரத்தில், அதை நிரூபிக்கத் தவறினால் பிரதமா் மோடியும், பாஜக தமிழக தலைவா் தமிழிசையும் அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தாா்.

இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், தமிழிசை கோவில்பட்டியில் செய்தியாளா்களை சந்தித்தாா். அவா் பேசுகையில், எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திமுக, பாஜகவுடன் பேசியது உண்மை தான். அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அதை நான் நிரூபிப்பேன். எனது அரசியல் வாழ்க்கை என்றும் நோ்மையானது. எனது பேச்சில் எப்போதும் உண்மை இருக்கும்.

கலைஞரின் மகன் நீண்ட நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதே போன்று நான் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை” என்று பதில் அளித்துள்ளாா்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*