Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

கோபி அருகே பணத் தகராறில் டிராக்டர் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை



கோபி: கோபி அடுத்த லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 39), டிராக்டர் டிரைவர். போடி சின்னம் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சுந்தரம் என்பவரிடம் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 9-ந் தேதி தனது டிராக்டரை ஓட்டி வந்த சிவகுமாரிடம் டிராக்டர் ஓட்டிய வகையில் பாக்கி பணம் ரூ.4 லட்சம் தர வேண்டும். அதை எப்போது தருவாய்? என்று சுந்தரம் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம் சிவக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் டிராக்டர் டிரைவர் சிவக்குமார் மனம் உடைந்த நிலையில் இருந்தார். கடந்த 11-ந் தேதி அவர் திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சிவகுமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோபி போலீசார் சுந்தரம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



“தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கூடாது” – நீதிமன்றம்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் – கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்



அண்மை செய்திகள்